ஆலந்தூரில் வன்முறையில் ஈடுபட்ட பிரபல ரவுடி ராபின்சனுக்கு ஒருநாள் போலீஸ் காவல்; கோர்ட்டு உத்தரவு


ஆலந்தூரில் வன்முறையில் ஈடுபட்ட பிரபல ரவுடி ராபின்சனுக்கு ஒருநாள் போலீஸ் காவல்; கோர்ட்டு உத்தரவு
x

ஆலந்தூரில் வன்முறையில் ஈடுபட்ட பிரபல ரவுடி ராபின்சனை ஒருநாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

சென்னை

சென்னையை அடுத்த ஆலந்தூர் ஆபிரகாம் தெருவில் கடந்த 10-ந்தேதி இரவு பெட்ரோல் குண்டு வீசி ரவுடி கும்பல் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டது. அப்போது சாலையில் நடந்து சென்ற நவீன், சபீக், அபூபக்கர் ஆகியோரையும் வெட்டி விட்டு தப்பிச்சென்றது. இது தொடர்பாக பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்த ரவுடி கும்பல் சஞ்சய், கவுதம் உள்பட 19 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வன்முறைக்கு மூளையாக செயல்பட்ட ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்த பிரபல ரவுடி ராபின்சனை பரங்கிமலை போலீசார் தேடி வந்தனர். கடந்த 15-ந்தேதி அவர் செய்யூர் கோர்ட்டில் சரணடைந்தார்.

இதையடுத்து ராபின்சனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பரங்கிமலை போலீசார் ஆலந்தூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு வைஷ்ணவி, ராபின்சனை ஒருநாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.


Next Story
  • chat