பல்கலைக்கழக வேந்தர் என்ற பதவியின் மூலம் அரசியல் செய்வது கவர்னருக்கு அழகல்ல - மக்கள் நீதி மய்யம்

பல்கலைக்கழக வேந்தர் என்ற பதவியின் மூலம் அரசியல் செய்வது கவர்னருக்கு அழகல்ல - மக்கள் நீதி மய்யம்
x

பல்கலைக்கழக வேந்தர் என்ற பதவியின் மூலம் அரசியல் செய்வது என்பதெல்லாம் கவர்னரின் பதவிக்கு அழகல்ல என்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.

சென்னை,

பல்கலைக்கழக வேந்தர் என்ற பதவியின் மூலம் அரசியல் செய்வது என்பதெல்லாம் கவர்னரின் பதவிக்கு அழகல்ல என்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "பாஜகவை எதிர்க்கும் கட்சியானது ஆளும் கட்சியாகவுள்ள மாநிலங்களில் கவர்னர்கள் தங்கள் அதிகார எல்லையைத் தாண்டி எதிர்க்கட்சித் தலைவர் போல் செயல்படுவதாகவே ஐயம் எழுகிறது. கேரள கவர்னரின் நடவடிக்கைகள் இதற்கு நல்ல உதாரணம். தமிழகத்திலும் இதே போக்குதான் நிலவுகிறது.

இதுபோன்ற நிகழ்வுகள் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. மாநில சுயாட்சியை கேள்விக்குறியாக்குகிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல்தர இழுத்தடிப்பது; "அரசியல்சாசனம் வழங்காத" பல்கலைக்கழக வேந்தர் என்ற பதவியின் மூலம் அரசியல் செய்வது என்பதெல்லாம் கவர்னரின் பதவிக்கு அழகல்ல" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story