10-ம் தேதி முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு வினியோகம் - தமிழக அரசு அறிவிப்பு


10-ம் தேதி முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு வினியோகம் - தமிழக அரசு அறிவிப்பு
x

2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

சென்னை,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு போன்ற பொருட்கள் அடங்கிய தொகுப்புடன் ரூ. 1,000 ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். அதன்படி 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், ரூ.1,000 ரொக்கப்பணத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் நாளை முதல் ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், வரும் 10-ம் தேதி முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பானது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி 9-ம் தேதி வரை டோக்கன்கள் வினியோகிக்கப்படும். இதன் பின்னர் 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை மக்கள் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம். மேலும் 13-ம் தேதிக்குள் பெற முடியாதவர்கள் 14-ம் தேதியன்று பெற்றுக்கொள்ளலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சர்க்கரை அட்டை மற்றும் பொருளில்லா அட்டைதாரர்களை தவிர்த்து அனைவரும் பெற்றுக்கொள்ளலாம் .


Next Story