ஜூன் 15-ம் தேதி சென்னை வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
சென்னை கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.
சென்னை,
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனையை ஜனாதிபாதி திரவுபதி முர்மு வரும் ஜூன் 5-ந்தேதி திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மருத்துவமனையை திறந்துவைப்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்முவை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் மருத்துவமனையின் திறப்பு விழா தேதி மாற்றப்படுவதாக தகவல் வெளியானது.
ஜனாதிபதியின் வெளிநாடு பயணம் காரணமாக ஜூன் 5ல் மருத்துவமனையை திறந்துவைப்பதில் சிக்கல் இருப்பதாகவும், இதனால் அவர் திறப்பு தேதி மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், ஜனாதிபாதி திரவுபதி முர்மு ஜூன் 15-ம் தேதி சென்னை வருகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவர், சென்னை கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைப்பதற்காக ஜூன் 15 தேதி தமிழகம் வர உள்ளார்.