திருச்சியில் தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்து சேதம் - 27 பேர் உயிர் தப்பினர்


திருச்சியில் தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்து சேதம் - 27 பேர் உயிர் தப்பினர்
x

சரியான நேரத்தில் பயணிகள் கீழே இறங்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

திருச்சி,

திருச்சியில் இருந்து சென்னை நோக்கி இரவில் தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பேருந்தில் 27 பயணிகள் பயணம் செய்தனர். திருச்சி மன்னார்புரம் மேம்பாலத்தைக் கடந்தபோது பேருந்தின் டயர் வெடித்து திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள், உடனடியாக பேருந்தில் இருந்து கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் பேருந்து முழுவதுமாக எரிந்து சேதமானது. சரியான நேரத்தில் பயணிகள் அனைவரும் பேருந்தில் இருந்து கீழே இறங்கியதால், நல்வாய்ப்பாக 27 பேரும் உயிர் தப்பினர். பயணிகள் மாற்று பேருந்தில் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

1 More update

Next Story