மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திருவள்ளூரில் தே.மு.தி.க சார்பில் போராட்டம்


மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திருவள்ளூரில் தே.மு.தி.க சார்பில் போராட்டம்
x

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திருவள்ளூரில் தே.மு.தி.க சார்பில் போராட்டம் நடந்தது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள டோல்கேட் பகுதியில் நேற்று திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட தே.மு.தி.க சார்பில் மின்சார கட்டண உயர்வு, உணவுப் பொருட்களின் விலை உயர்வு, மற்றும் ஜி.எஸ்.டி வரி உயர்வை எதிர்த்தும், இதற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு தே.மு.தி.க.வின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் 500-க்கும் மேற்பட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களை வாட்டி வதைக்கும் மின்கட்டண உயர்வு மற்றும் ஜி.எஸ்.டி வரி உயர்வை மத்திய மாநில அரசுகள் வாபஸ் பெற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் திரளான கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story