புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மின்மாற்றி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு


புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மின்மாற்றி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
x
Gokul Raj B 4 Jan 2023 6:08 PM GMT

சிப்காட் துணை மின் நிலையத்தில் உள்ள மின்மாற்றியில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் இருந்து அதன் சுற்றுப்புறங்களில் உள்ள சுமார் 90 கிராமங்களுக்கு மின்சாரம் பகிர்மானம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த துணை மின் நிலையத்தில் உள்ள மின்மாற்றியில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு, தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அங்கு பற்றியெரிந்த தீயை அணைத்தனர். இதனைத் தொடர்ந்து மீன் ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்து மீண்டும் துணை மின் நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.Next Story