கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது - போக்குவரத்து கடும் பாதிப்பு


கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது - போக்குவரத்து கடும் பாதிப்பு
x

கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து கடும் பாதிக்கப்பட்டது.

செங்கல்பட்டு

சென்னை புறநகர் பகுதியான வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நேற்று மாலை திடீரென பலத்த கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே உள்ள ஜி.எஸ்.டி. சாலையில் மழை நீர் 2 அடிக்கு மேல் தேங்கி ஆறு போல் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்ததால், சென்னை கோயம்பேடு மற்றும் சென்னை புறநகர் பகுதியில் இருந்து தென் மாவட்டங்கள் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் தண்ணீரில் ஊர்ந்து மெதுவாக சென்று கொண்டிருந்தது.

கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிளில் ஆறு போல் பெருகெடுத்து ஓடிய மழை நீரில் செல்லமுடியாமல் வாகனங்கள் பாதி அளவுக்கு மூழ்கி அப்படியே சாலையில் நின்று விட்டது. இதனால் கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரம் வரை சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கி பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கிளாம்பாக்கம் பகுதியை கடக்க முடியாததால் வாகனங்களை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருப்பி விட்டனர். இதனால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Next Story