காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிரடியாக அதிகரிப்பு - கரூர் மக்களுக்கு எச்சரிக்கை


காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிரடியாக அதிகரிப்பு - கரூர் மக்களுக்கு எச்சரிக்கை
x
தினத்தந்தி 3 Aug 2022 9:55 AM GMT (Updated: 3 Aug 2022 9:57 AM GMT)

கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிரடியாக அதிகரித்துள்ளது.

கரூர்,

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தில் காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிரடியாக அதிகரித்துள்ளது. நேற்று வரை 44 ஆயிரத்து 955 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று வினாடிக்கு 67 ஆயிரத்து 911 கன அடியாக அதிகரித்துள்ளது.

நான்கு பிரதான வாய்க்கால்களில் ஆயிரத்து 120 கன அடி நீரும் காவிரி ஆற்றில் 66 ஆயிரத்து 791 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

நீர் வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் மற்றும் நீர் வள ஆதாரங்கள் துறை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.


Next Story