புதிய தோற்றத்தில் ரேஷன் கடைகள் - மாதிரி வரைப்படத்தை வெளியிட்டது தமிழக அரசு


புதிய தோற்றத்தில் ரேஷன் கடைகள் - மாதிரி வரைப்படத்தை வெளியிட்டது தமிழக அரசு
x

ரேஷன் கடைகளை மேம்படுத்தி புதிய தோற்றத்துடன் கட்டடம் கட்ட முடிவுசெய்து அதற்கான மாதிரி கட்டட வரைபடத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழகம் முழுவதும் சுமார் 34 ஆயிரத்திற்கும் அதிகமான நியாயவிலைக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இருப்பினும் பல கடைகள் வாடகை கட்டடத்தில் இயங்குவதால் சொந்த கட்டடம் கட்டித்தர வேண்டும் எனவும், அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்றும் தொடர் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.


அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் சொந்த கட்டடம் கட்ட படிப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து ரேஷன் கடைகளை மேம்படுத்தி, புதிய பொலிவுடன் கட்டடம் கட்ட முடிவு செய்து, அதற்கான மாதிரி வரைப்படத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

1 More update

Next Story