பணி நீக்கம் செய்யப்பட்ட 30 தூய்மை பணியாளர்களுக்கு மீண்டும் வேலை


பணி நீக்கம் செய்யப்பட்ட 30 தூய்மை பணியாளர்களுக்கு மீண்டும் வேலை
x

பணி நீக்கம் செய்யப்பட்ட 30 தூய்மை பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை)அவர்கள் பணிக்கு திரும்புகிறார்கள்

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் பணிபுரிந்து வந்த 25 பெண்கள், 5 ஆண்கள் என 30 தூய்மை பணியாளர்கள் கடந்த 30-ந் தேதி பணி நீக்கம் ெசய்யப்பட்டனர். இதனை கண்டித்து தூய்மை பணியாளர்கள் கடந்த 1-ந் தேதி முதல் நகராட்சி அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று 5-வது நாள் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, நகராட்சி நிர்வாகம், ஒப்பந்ததாரர் மற்றும் தூய்மை பணியாளர்கள் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஏற்கனவே பணியில் இருந்து நீக்கப்பட்ட 30 தூய்மை பணியாளர்களுக்கும் வேலை தருவதாக நகராட்சி நிர்வாகம் ஒத்துக்கொண்டது. மேலும், சம்பளத்துடன் பி.எப். செலுத்த வேண்டும் என அரசின் விதி உள்ளதால் இவர்களுக்கு பி.எப். ெசலுத்த முடியாத நிலை உள்ளது. எனவே 112 தூய்மை பணியாளர்களுக்கும் சராசரியாக தலா ரூ.310 சம்பளம் வழங்கப்படும் என நகராட்சி நிர்வாகம் கூறியது. இதனை தூய்மை பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஜெயங்கொண்டம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்புகின்றனர்.


Next Story