காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு ஆண்டில் 195 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு


காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு ஆண்டில் 195 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு
x

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு ஆண்டில் 195 ஏக்கர் கோவில் நிலம் மீட்கப்பட்டுள்ளது என்று காஞ்சீபுரம் மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி நிருபர்களிடம் கூறியதாவது:-

காஞ்சிபுரம்

முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுரையின் பேரில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் ஆகியோரது அறிவுரையின் பேரில் தமிழ்நாட்டில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோடிக்கணக்கான மதிப்பீட்டில் உள்ள கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இந்த ஒரு ஆண்டில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 17 கோவில்களுக்கு சொந்தமான ரூ.1581 கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில் 195 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணிக்கு ரூ.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருகோவிலில் மலை மீது வயதானவர்கள், பக்தர்கள் செல்ல வசதியாக ரூ.11 கோடி மதிப்பிலான ரோப் கார் வசதியும், திருநீர்மலை ரங்கநாதசாமி கோவிலில் பக்தர்கள் வசதிக்காக ரூ.8 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் ரோப் கார் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story