வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக 5,899 கன அடி நீர் திறப்பு


வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக 5,899 கன அடி நீர் திறப்பு
x

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசனப் பகுதிகளுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

தேனி,

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 67 அடியாக உள்ளது. இந்த நிலையில் வைகை அணையில் இருந்து ஏற்கனவே மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசனப் பகுதி விவசாயிகள் தங்கள் பகுதிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று சிவகங்கை, ராமநாதபுரம் வைகை பூர்வீக பாசன 1,2,மற்றும் 3பகுதிகளுக்கு வைகை அணையில் இருந்து நேற்று முதல் டிசம்பர் 8ந்தேதி வரையில் 3 கட்டங்களாக தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில் இன்று வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 5,899 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வைகை ஆற்று கரையோர சாலைகள் மற்றும் யானைக்கல் ஆற்றோர சாலைகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் தரைப்பாலங்கள் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

மேலும் வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் வைகை ஆற்றில் பொதுமக்கள் யாரும் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story