செங்கல்பட்டு அருகே சாலை விபத்தில் பலியானவரின் குடும்பத்துக்கு நிவாரணம்
செங்கல்பட்டு அருகே சாலை விபத்தில் பலியானவரின் குடும்பத்துக்கு நிவாரண காசோலையை உயிரிழந்த பவானியின் குடும்பத்தினரிடம் செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி கிராமம் மறைமலைநகர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட காட்டுப்பாக்கம் ரெயில்வே சாலை சந்திப்பு எதிரில் கடந்த 11.8.2023 அன்று நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்த பவானியின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சத்திற்கான காசோலையை அவரது குடும்பத்தினரிடம் செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் வழங்கி ஆறுதல் தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது செங்கல்பட்டு தாசில்தார் தனலட்சுமி ராஜன் உடன் இருந்தார்.
Related Tags :
Next Story