வாலிபரை கத்தியால் தாக்கி பணம் பறித்த ரவுடி கைது
திருவள்ளூர் அருகே வாலிபரை கத்தியால் தாக்கி பணம் பறித்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் அடுத்த நரசிங்கபுரம் பெரியதெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 21). இவர் வேலையின் காரணமாக பேரம்பாக்கம் சென்று விட்டு மீண்டும் தனது வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த நரசிங்கபுரம் பெரிய தெருவை சேர்ந்த முகிந்தர் (வயது 27) என்பவர் தான் ரவுடி என்றும், பலமுறை ஜெயிலுக்கு சென்று வந்தவன் எனக்கூறி கத்தியை காட்டி அவரது பையில் இருக்கும் பணத்தை தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரம் அடைந்த முகிந்தர் தான் வைத்திருந்த கத்தியால் ஜெயக்குமாரின் நெற்றியில் வெட்டியதால் காயம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து ஜெயக்குமார் மப்பேடு போலீசில் அளித்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் வழக்கு பதிவு செய்து முகிந்தரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story