ரவுடியை கைது செய்ய சிறைக்கு வெளியே காத்திருந்த போலீசுக்கு வார்டன்கள் வைத்த டுவிஸ்ட்..!


ரவுடியை கைது செய்ய சிறைக்கு வெளியே  காத்திருந்த போலீசுக்கு வார்டன்கள் வைத்த டுவிஸ்ட்..!
x
தினத்தந்தி 8 Jun 2022 4:01 AM GMT (Updated: 2022-06-08T10:45:08+05:30)

சேலம் மத்திய சிறையில் ரவுடியை தப்ப வைத்த இரு வார்டன்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

சேலம்:

சிவகங்கையை சேர்ந்த பிரபல ரவுடி வசந்த என்பவர் வழிபறி வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று அவர் ஜாமினில் வெளியே வர இருந்தார்.

அப்போது வசந்த் மீது மற்றொரு வழக்கில் பிடிவாரண்டி இருப்பதால் சிவகங்கை தனிப்படை போலீசார் அவரை கைது செய்ய வெளியே காத்திருந்தனர். நீண்ட நேரமாகியும் சிறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த தனிப்படை போலீசார் சிறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டனர்.

அதற்கு சிறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ரவுடி முன்பே சென்று விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சிறையில் இருந்து வெளியே வர ஒரு பாதை தான் இருக்கிறது. இந்த பாதை வழியாக வெளியே வர வில்லை என்று கேட்டுள்ளனர்.

விசாரணையில் சிறை வார்டன்கள் 2 பேர் ரவுடியை வேறு வழியாக தப்ப வைத்தது தெரியவந்தது.

இதை தொடர்ந்து சிறைகண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் பணியில் இருந்த சிறை வார்டன்கள் ரமேஷ், பூபதி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் இரு வார்டன்களையும் பணியிடை நீக்கம் செய்து சிறைக்கண்காணிப்பாளர் உத் தரவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story