குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500 இழப்பீடு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு


குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500 இழப்பீடு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
x

பயிர் பாதிப்பு விவரங்களை கணக்கிட்டு ஹெக்டேருக்கு ரூ.13,500 இழப்பீடு வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

காவிரியில் இருந்து கர்நாடக அரசு போதிய அளவு தண்ணீர் திறந்துவிடாததால், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் குறுவை சாகுபடி செய்வதற்கு ஏதுவாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்த நிலையில், காவிரி ஆற்றில் இருந்து கர்நாடக அரசு போதிய அளவு தண்ணீர் திறந்துவிடாத காரணத்தால், தற்போது டெல்டா மாவட்டங்களில் ஏறத்தாழ 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரடப்பட்ட நெற்பயிர்கள் வாடிய நிலையில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பயிர் பாதிப்பு விவரங்களை முறையாக கணக்கிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500 இழப்பீடு வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story