உப்பள தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் - முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்


உப்பள தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் - முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்
x

உப்பள தொழிலாளர்களுக்கு நிவாரண தொகைகளுக்கான காசோலைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

சென்னை,

உப்பு உற்பத்தி இல்லாத அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டங்களில் உப்பள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு சமூக பாதுகாப்பு நல வாரியத்தில் பதிவு செய்துள்ளவர்களின் குடும்பங்களுக்கு, ஆண்டு ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என சட்டமன்ற மானிய கோரிக்கையின் போது தெரிவிக்கப்பட்டது.

அதன்படி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உப்பள தொழிலாளர்களுக்கு நிவாரண தொகைகளுக்கான காசோலைகளை இன்று வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சி.வி.கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story