காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் - காவல்துறை தகவல்


காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் - காவல்துறை தகவல்
x

குழந்தைகளின் கைகளில் ‘டேக்’ ஒட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

காணும் பொங்கலையொட்டி சென்னையில் இன்று மொத்தம் 17 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளதாக சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரைக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் குடும்பங்களுடன் வருகை தருவார்கள் என்பதால், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் இரவு 10 மணிக்கு மேல் அனுமதி இல்லை எனவும், நீரில் இறங்கி குளிக்க அனுமதி இல்லை எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் காணாமல் போவதை தவிர்ப்பதற்காக குழந்தைகளின் கைகளில் 'டேக்' ஒட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அதோடு சாலைகளில் பைக் சாகசங்களில் ஈடுபடுவோரை கண்காணிப்பதற்காக சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story