செந்தில் பாலாஜி வழக்கு 11-ந்தேதி ஒத்திவைப்பு - ஐகோர்ட்டு உத்தரவு


செந்தில் பாலாஜி வழக்கு 11-ந்தேதி ஒத்திவைப்பு - ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 7 July 2023 3:20 PM IST (Updated: 7 July 2023 3:22 PM IST)
t-max-icont-min-icon

செந்தில் பாலாஜி வழக்கை வரும் 11-ந்தேதிக்கு ஒத்திவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

செந்தில் பாலாஜி வழக்கு மீதான விசாரணையில் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கப்பட்ட நிலையில், இன்று 3-வது நீதிபதி விசாரணை நடைபெற்றது. முன்னதாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை காவல் காலமாக கருத முடியாது என அமலாக்கத்துறை கோரியிருந்தது.

இந்த நிலையில் இன்று 3-வது நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது அமலாக்கத்துறை தரப்பிலும், செந்தில் பாலாஜியின் மனைவி மேகலாவின் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, செந்தில் பாலாஜி வழக்கை வரும் 11-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


Next Story