சென்னையில் உள்ள சிவன் கோவில்களில் விடிய, விடிய சிவராத்திரி விழா


சென்னையில் உள்ள சிவன் கோவில்களில் விடிய, விடிய சிவராத்திரி விழா
x
தினத்தந்தி 9 March 2024 12:06 AM GMT (Updated: 9 March 2024 1:18 AM GMT)

சென்னையில் உள்ள சிவன் கோவில்களில் விடிய, விடிய சிவராத்திரி விழா கோலாகலமாக நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

சுவரர் கோவில், திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவில், வடபழனி முருகன் கோவில், பாடி திருவலிதாயம் திருவல்லீசுவரர் கோவில், சைதாப்பேட்டை காரணீஸ்வரர், வியாசர்பாடி ரவீஸ்வரர், புழல் திருமூலநாதசாமி கோவில்களில் சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடந்தது.

இரவு முழுவதும் 4 கால பூஜைகள் நடந்தன. அப்போது சிவபெருமானுக்கு பால், தயிர், சந்தனம் அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. ஒவ்வொரு கால பூஜைகளிலும் பஜனை நடந்தது. கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறிய சிவலிங்கங்களுக்கு பக்தர்கள் தங்கள் கைகளாலேயே பால் அபிஷேகம் செய்தனர்.

காலை முதலே சிவன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சிவ தரிசனம் மேற்கொண்டனர். பெண்கள் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். ஒவ்வொரு கால பூஜையிலும் இறைவனுக்கு படைக்கப்பட்ட சாதம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

இசை நிகழ்ச்சிகள், பரத நாட்டியம், ஆன்மிக கருத்தரங்கம் கோவில்களில் நடத்தப்பட்டது. பல கோவில்களில் பக்தர்களுக்கு ருத்ராட்சம் வழங்கப்பட்டது.


Next Story