தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை அகற்றக்கோரி ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் - வைகோ அறிவிப்பு
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை அகற்றக்கோரி ம.தி.மு.க. சார்பில் வரும் 20-ந்தேதி கையெழுத்து இயக்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
ம.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ம.தி.மு.க.வின் 29-வது பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ்நாடு கவர்னர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை அகற்றக்கோரும் கையெழுத்து இயக்கத்தை 20-ந்தேதி காலை 11 மணியில் இருந்து நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கையெழுத்து இயக்கத்தை சென்னையில் உள்ள ம.தி.மு.க.வின் தலைமைக் கழகமான தாயகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் அனைத்து மாவட்டங்களில் கையெழுத்து இயக்கம் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story