ஆந்திராவிலிருந்து திருத்தணிக்கு மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தல்; 2 பேர் கைது


ஆந்திராவிலிருந்து திருத்தணிக்கு மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தல்; 2 பேர் கைது
x

ஆந்திராவிலிருந்து திருத்தணிக்கு மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர்

ஆந்திர மாநிலம், புத்தூர் பகுதியில் இருந்து திருத்தணிக்கு கஞ்சா கடத்தி வருவதாக திருத்தணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் பொன்பாடி சோதனைச் சாவடி அருகே உள்ள மத்தூர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஆந்திர மாநில பகுதியில் இருந்து திருத்தணியை நோக்கி சந்தேகம்படும்படி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த 2 வாலிபர்களை போலீசார் மடக்கி சோதனை செய்தனர்.

அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் 1 கிலோ 400 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த ரியாஸ் (வயது 24), சாலேஷா (25) ஆகிய 2 பேர் ஆந்திர மாநிலம் புத்தூர் பகுதியில் இருந்து கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து கஞ்சா கடத்திய 2 பேரையும் கைது செய்த போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story