சென்னை- நெல்லை இடையே நாளை சிறப்பு ரெயில் இயக்கம்


சென்னை- நெல்லை இடையே நாளை சிறப்பு ரெயில் இயக்கம்
x

சிறப்பு ரெயில், சென்னை எழும்பூரில் இருந்து நாளை இரவு 11.45 மணிக்கு புறப்படுகிறது.

நெல்லை,

சென்னை- நெல்லை இடையே நாளை சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி நாளை சென்னை எழும்பூரில் (வண்டி எண் 06051) இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரெயில், அடுத்த நாள் காலை 11.15 மணிக்கு நெல்லை சென்றடையும்.

மறுமார்க்கமாக திங்கட்கிழமை இரவு 10 மணிக்கு நெல்லையில் (வண்டி எண் 06052) இருந்து புறப்படும் சிறப்பு ரெயிலானது, மறுநாள் காலை 10.05 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.


Next Story