மாநிலங்களவை தேர்தல்: தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் வேட்பாளராக ப.சிதம்பரம் தேர்வு


மாநிலங்களவை தேர்தல்: தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் வேட்பாளராக ப.சிதம்பரம் தேர்வு
x

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி சார்பில் 10 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

மாநிலங்களவையில் தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களின் 57 இடங்களுக்கான தேர்வதல் வரும் ஜூன் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 31 ஆம் தேதி நிறைவடைகிறது.

இந்த சூழலில் மாநில கட்சிகள் மற்றும் தேசிய அளவிலான கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. இதன்படி பாஜக சார்பில் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கர்நாடக மாநிலத்தில் இருந்தும், மத்திய மந்திரி பியூஷ் கோயல் மராட்டிய மாநிலத்தில் இருந்தும் பாஜக சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் 10 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து திமுக சார்பில் கல்யாணசுந்தரம், ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story