கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு என போலி தகவல் பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை


கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு என போலி தகவல் பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை
x

கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு என போலி தகவல் பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சிபுரம்

தமிழக கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் கால்நடைகளை கையாளுதல் மற்றும் கால்நடைகளை பராமரிப்பவர் என்ற பணியிடங்களுக்கு சம்பளம் முறையே ரூ.15,000/- மற்றும் ரூ.18,000/- எனவும் தகுதி மற்றும் வயது ஆகியவை நிர்ணயிக்கப்பட்டு 90 மணி நேரம் பயிற்சி அளித்து பணி நியமன ஆணை வழங்கப்படும் எனவும் அதற்கான ஆணை ஜூன் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் எனவும் வாட்ஸ்அப் செயலி மற்றும் முகநூல் மூலம் பரப்பப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானவை.

இந்த மாதிரியான போலி தகவல்கள் தற்போது காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் பரவி உள்ளது. பொதுமக்கள் கால்நடை பராமரிப்புத்துறை குறித்து வரும் போலியான அறிவிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம். மேலும், போலியான தகவல்களை பரப்பும் நபர்கள் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.


Next Story