ஓய்வூதிய பலன்களை வழங்க கோரி போராட்டம்


ஓய்வூதிய பலன்களை வழங்க கோரி போராட்டம்
x

ஓய்வூதிய பலன்களை வழங்க கோரி போராட்டம் நடைபெற்றது.

விருதுநகர்


விருதுநகர் மண்டல போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் சார்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தங்கப்பழம் தலைமை தாங்கினார். 94 மாத அகவிலைப்படி நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நீதிமன்ற தீர்ப்புகளை மேல்முறையீடு செய்யாமல் அமல்படுத்த வேண்டும். 2003-ம் ஆண்டிற்கு முன் பணியில் சேர்ந்தவர் களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும். ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். பணியின் போது இறந்தவர்களின் வாரிசுதாரருக்கு நிபந்தனை இன்றி வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.


1 More update

Next Story