திடீர் ஆய்வு - மருத்துவரை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி


திடீர் ஆய்வு - மருத்துவரை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி
x
தினத்தந்தி 10 Jun 2022 6:43 AM GMT (Updated: 10 Jun 2022 10:56 AM GMT)

திடீர் ஆய்வின் போது பணியில் இல்லாத மருத்துவரை பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அமைச்சரின் திடீர் ஆய்வை சற்று எதிர்பார்க்காத ஊழியர்கள் செய்வதறியாது திகைத்தனர்.

நோயாளிகள் மருந்து வாங்கும் இடங்கள் மற்றும் மருத்துவமனை வளாகம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். அதன் பின்னர் மருத்துவர் இருக்கும் இடத்தை சென்று பார்த்தார். அப்போது மருத்துவர் பூபேஷ்குமார் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே மருத்துவர் பூபேஷ்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டார். அதையடுத்து பணி நேரத்தில் பணியில் இல்லாததால் மருத்துவர் பூபேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்ய உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story