தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு: திமுக அறிவிப்பு

தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில்  காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு: திமுக  அறிவிப்பு
x

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று திமுக தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

சென்னை,

தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் நவம்பர் 30-ல் நடைபெறும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஆதரவு அளிப்பதாக கட்சியின் தலைமையில் இருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று திமுக தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

Next Story