சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆலந்தூர் மண்டலத்தில் மாநகராட்சி மேயர் ஆய்வு


சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆலந்தூர் மண்டலத்தில் மாநகராட்சி மேயர் ஆய்வு
x

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆலந்தூர் மண்டலத்தில் நடக்கும் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடந்தது.

சென்னை

சென்னை மாநகராட்சி ஆலந்தூர் 12-வது மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் நடக்கும் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடந்தது. இதில், துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் (பொறுப்பு) பிரசாந்த், மண்டல குழு தலைவர் என்.சந்திரன், மாநகராட்சி தி.மு.க. குழு தலைவர் ராமலிங்கம், மண்டல உதவி கமிஷனர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மண்டலத்தில் நடக்கும் பணிகள் குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது. அப்போது பேசிய கவுன்சிலர்கள் செல்வேந்திரன், உஷாராணி பிருந்தாஸ்ரீ, துர்காதேவி, பூங்கொடி, சாலமோன், தேவி, ரேணுகா, காங்கிரஸ் கவுன்சிலர் நாஞ்சில் பிரசாத் ஆகியோர் சாலை, பாதாள சாக்கடை, குப்பைகள் அகற்றுதல் உள்ளிட்ட தங்கள் பகுதிகள் குறித்த பிரச்சினைகள் குறித்து பேசினர்.


Next Story