சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர்: அனைத்து உறுப்பினர்களுக்கும் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது - சபாநாயகர் அப்பாவு


சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர்:  அனைத்து உறுப்பினர்களுக்கும் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது - சபாநாயகர் அப்பாவு
x

சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் அனைத்து உறுப்பினர்களுக்கும் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.

சபாநாயகர் அப்பாவு நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக சட்டமன்றத்தில் வருகிற 20-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த முறை எந்தவித சலசலப்புகளும் இல்லாத அளவுக்கு பேரவை நடைபெறும். மேலும் மக்களின் கோரிக்கைகள் குறித்து பேச அனைத்து உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.

சட்டமன்றத்தில் எதிர்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் முடிந்து விட்டது. அவர்களே அதைப்பற்றி பேசாதபோது, நடிகர் வடிவேலு பாணியில் உசுப்பேத்தி விடுகிறீர்கள். சட்டசபையில் யாருக்கு எங்கு இருக்கை ஒதுக்க வேண்டும் என்பது எனது உரிமை. அவரவருக்கு எங்கு ஒதுக்க வேண்டுமோ அங்கு இருக்கைகளை ஒதுக்கி விட்டேன். அதில் இருந்து அவர்கள் மக்கள் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story