தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இதுவரை 9.16 லட்சம் புகார்கள் பெறப்பட்டு உள்ளன: அமைச்சர் செந்தில் பாலாஜி


தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இதுவரை 9.16 லட்சம் புகார்கள் பெறப்பட்டு உள்ளன: அமைச்சர் செந்தில் பாலாஜி
x

கோப்புப்படம் 

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இதுவரை 9.16 லட்சம் புகார்கள் பெறப்பட்டு உள்ளன என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை,

கடந்த ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி முதலமைச்சர் மின்னகம் நுகர்வோர் சேவையை தொடங்கி வைக்கப்பட்டது. இந்த சூழலில் மின்னகம் நுகர்வோர் சேவை தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தில் அமைந்துள்ள மின்னகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இதுவரை 9.16 லட்சம் புகார்கள் பெறப்பட்டு உள்ளன . 9.11 லட்சம் புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஒரு லட்சம் அழைப்புகள் வந்தாலும், அதை பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.சமூக வலைத்தளங்களின் மூலம் வரும் புகார்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஒரு லட்சம் புகார்கள் வந்தாலும் அதை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வட சென்னை அனல் மின் நிலையம் மூன்றாம் நிலை பணிகள் இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்படும். தமிழ்நாட்டில் மூன்று நாட்கள் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது அதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஸ்காட்லாந்து, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு 5 பேர் கொண்ட குழுவாக கடலில் காற்றாலை தயாரிக்கும் பணி தொடர்பாக இன்று வெளிநாடு செல்கிறோம்". இவ்வாறு அவர் கூறினார்.


Next Story