அண்ணா, பெரியார் பிறந்த நாட்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி - தமிழக அரசு அறிவிப்பு
அண்ணா, பெரியார் பிறந்த நாட்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ் வளர்ச்சித் துறைக்கான 2021-2022-ம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, அண்ணா, பெரியார் பிறந்த நாட்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடைபெறுகிறது.
அண்ணா பிறந்தநாளான வருகிற 15-ந்தேதி நடைபெறும் போட்டி:
பள்ளி மாணவர்கள் | கல்லூரி மாணவர்கள் |
1. தாய் மண்ணிற்கு பெயர் சூட்டிய தனயன் | 1.அண்ணாவும் தமிழக மறுமலர்ச்சியும் |
2. மாணவர்களுக்கு அண்ணா | 2.அண்ணாவின் மனிதநேயம் |
3. அண்ணாவின் மேடைத்தமிழ் | 3.அண்ணாவின் தமிழ் வளம் |
4. அண்ணா வழியில் அயராது உயரும்! | 4.அண்ணாவும் தமிழ் சமுதாயமும் |
5. அண்ணாவின் வாழ்விலே | 5.அண்ணாவின் அடிச்சுவட்டில் |
மேலும், பெரியார் பிறந்தநாளான வருகிற 17-ந்தேதி நடைபெறும் போட்டி:
பள்ளி மாணவர்கள் | கல்லூரி மாணவர்கள் |
1.பெண்ணடிமை தீருமட்டும் | 1.பெண் ஏன் அடிமையானாள்? |
2.தந்தை பெரியாரின் வாழ்க்கையிலே | 2.இனிவரும் உலகம் |
3.தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள் | 3.சமுதாய விஞ்ஞானி பெரியார் |
4.பெரியாரின் உலக நோக்கு | 4.உலகச் சிந்தனையாளர்களும் பெரியாரும் |
5.பெரியார் காண விரும்பிய சமூகநீதி 6.மூட நம்பிக்கை ஒழிப்பில் தந்தை பெரியார் |
மேற்கண்ட தலைப்புகளிலும் பேச்சுப்போட்டிகள் நடைபெறுகின்றன. வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முறையே முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். மேலும் சிறப்பு பரிசாக அரசுப்பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.