கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்
சிவகாசி,
சிவகாசி உட்கோட்டத்துக்கு உட்பட்ட எம்.புதுப்பட்டி போலீஸ் நிலையம் பகுதியில் அதிக அளவில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது என தினத்தந்தியில் செய்தி வெளியானது. இதையடுத்து மாவட்ட போலீஸ் நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் போலீசார் அந்த பகுதியில் சில இடங்களில் திடீர் வாகன தணிக்கை செய்து வருகிறார்கள். சம்பவத்தன்று தேவர் சிலை அருகில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த வாலிபரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரித்த போது அவர் விற்பனை செய்வதற்காக 50 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும், விஸ்வநத்தம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (வயது21) என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story