திருக்கழுக்குன்றத்தில் மோட்டர் சைக்கிள்- பஸ் மோதல் வாலிபர் பலி


திருக்கழுக்குன்றத்தில் மோட்டர் சைக்கிள்- பஸ் மோதல் வாலிபர் பலி
x

திருக்கழுக்குன்றம் பகுதியில் மோட்டர் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் வாலிபர் பலியானார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த அருங்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் மேகநாதன் (வயது 30). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர் திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிள் கடையில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை வேலை முடிந்து அவர் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். கொத்திமங்கலம் பைபாஸ் சாலை அருகே மாமல்லபுரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த அரசு பஸ் மேகநாதன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மேகநாதன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் திருக்கழுக்குன்றம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேகநாதனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story