சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணியிடம் செல்போனை திருடிய வாலிபர்கள் கைது


சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணியிடம் செல்போனை திருடிய வாலிபர்கள் கைது
x

சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணியிடம் செல்போனை திருடிய வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 54). டெல்லி சென்று விட்டு சென்னை திரும்பிய இவர், சென்னையில் இருந்து காட்பாடி செல்வதற்காக சென்டிரல் ரெயில் நிலையம் வந்தார். பயணச்சீட்டு எடுத்துவிட்டு, பயணிகள் காத்திருக்கும் பகுதியில் அமர்ந்திருந்த கோவிந்தனின் செல்போன் திடீரென மாயமானது.

இது குறித்த புகாரின்பேரில் கண்காணிப்பு கேமரா உதவியுடன் ரெயில்வே போலீஸ் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து பயணியிடம் செல்போன் திருடிய மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஹரிஓம் (22) மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சர்வேஷ் (27) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

1 More update

Next Story