இடத்தகராறில் கீழே தள்ளிவிட்டு விவசாயி கொலை
இளையான்குடி அருகே இடத்தகராறில் கீழே தள்ளிவிட்டு தம்பி கொலை செய்யப்பட்டார்.
இளையான்குடி
இளையான்குடி அருகே இடத்தகராறில் கீழே தள்ளிவிட்டு தம்பி கொலை செய்யப்பட்டார்.
தகராறு
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள உலகமணியேந்தல் கிராமத்தில் வசிப்பவர்கள் சூசை(வயது 65) மற்றும் பிளவேந்திரன்(62). விவசாயிகள். இவர்கள் சகோதரர்கள். சூசையின் மகளான அருள் முத்து மற்றும் அவரது கணவர் பிரான்சிஸ், மகன் ஜஸ்டின் திரவியம் ஆகியோர் அவர்கள் குடியிருக்கும் வீட்டின் அருகே உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் கழிவறை கட்டுவதற்காக அளவீடு செய்து கம்புகளை ஊன்றி வைத்தனர்.
அப்போது அருகே வசித்து வரும் பிளவேந்திரனின் மகன்களான தாஸ், சந்தியாகு ஆகியோர் இந்த இடத்தை நாங்கள் பயன்படுத்தி வருவதாகவும் நீங்கள் இதில் கழிவறை கட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் தகராறு ஏற்பட்ட இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் பிளவேந்திரனை தள்ளியதில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விசாரணை
இச்சம்பவம் தொடர்பாக சூசை, பிரான்சிஸ் மனைவி அருள் முத்து, பிரான்சிஸ், பிரான்சிஸ் மகன் ஜஸ்டின் திரவியம், சூசை மகள் வேளாங்கண்ணி ஆகிய 5 பேர் மீது இளையான்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரான்சிஸ், ஜஸ்டின் திரவியம், அருள் முத்து, வேளாங்கண்ணி ஆகிய 4 பேரும் தகராறின்போது காயம் அடைந்தனர். இவர்கள் இளையான்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சூசை தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.