சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மலர் கண்காட்சியை இன்று தொடக்கி வைக்கிறார் முதல் அமைச்சர்


சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மலர் கண்காட்சியை இன்று தொடக்கி வைக்கிறார் முதல் அமைச்சர்
x

சென்னை, கலைவாணர் அரங்கில் மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.

சென்னை,

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது.

மேலும் கருணாநிதி பிறந்தநாளில் சென்னையில் மலர் கண்காட்சிக்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது. கலைவாணர் அரங்கில் இன்று முதல் 5-ந்தேதி வரை 3 நாட்கள் மலர் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இதற்காக ஊட்டி, ஓசூர், திண்டுக்கல், பெங்களூரு, புனேவில் போன்ற இடங்களில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட வகைகளில் கண்ணை கவரும் அழகிய மலர்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுவது இதுவே முதல்முறை ஆகும். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கலைவாணர் அரங்கில், இந்த மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.

மலர் கண்காட்சியை கட்டணம் செலுத்தி பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்களுக்கு ரூ.20-ம் பெரியவர்களுக்கு ரூ.50 நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. மேலும், காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Next Story