பொன்னேரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை


பொன்னேரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை
x

பொன்னேரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட அண்ணாமலைச்சேரி கிராமம் உள்ளது. இங்கு வசிப்பவர் லோகநாதன். இவரது மனைவி குணசுந்தரி (வயது61) இவர் தன்னுடைய மகளை பிரசவத்திற்காக சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து இருந்தார்.

வீட்டை பூட்டிக்கொண்டு சென்ற நிலையில் பேரன் ஸ்ரீதர் வீட்டுக்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து குணசுந்தரி திருப்பாலைவனம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story