வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது


வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
x

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர்

ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒருவர் சென்னை, திண்டுக்கல் உள்பட பல இடங்களில் வெடிகுண்டு வெடிக்க போவதாக தெரிவித்தார்.

செல்போன் எண்ணை வைத்து விசாரித்தபோது மீஞ்சூர் பகுதியில் இருந்து போனில் பேசியது தெரியவந்தது.

இது குறித்து மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தேடியபோது மீஞ்சூர் ரெயில் நிலைய முதலாவது நடைமேடையில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான நிலையில் இருந்தார்.

அவரை பிடித்து மீஞ்சூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்ட போது மீஞ்சூர் அருகே உள்ள அனுப்பம்பட்டு ராஜாபாளையம் கிராமத்தை சேர்ந்த லோகேஷ் என்ற விக்னேஷ் (வயது 39) என்பது தெரியவந்தது.

அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story