கொள்ளையனை காக்கும் மந்திரம்..கொள்ளைக்கு முன் செய்யும் காரியம் - பிடிக்க முடியாமல் திணறும் போலீஸ்


கொள்ளையனை காக்கும் மந்திரம்..கொள்ளைக்கு முன் செய்யும் காரியம் - பிடிக்க முடியாமல் திணறும் போலீஸ்
x

காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் சாமியை வணங்கி கொள்ளையில் ஈடுபடும் திருடனை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

திருவண்ணாமலை

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சித்திரத்தில் ராஜ்குமார் என்பவரது ஹார்டுவேர் கடையில் கடந்த ஜூன் மாதம் 1 லட்சம் ரூபாயை மர்ம நபர் திருடிச் சென்றார். சிசிடிவியில் பதிவான காட்சியில், சாமி படங்களை வணங்கிவிட்டு கொள்ளையடித்தது தெரிய வந்தது. அந்த திருடன் பிடிபடாத நிலையில், அதே நபர் திருவண்ணாமலை மாவட்டம் சிறுநாத்தூர் பகுதியில் பாத்திரக் கடையிலும் கைவரிசை காட்டியுள்ளார்.

கல்லாப்பெட்டியின் பூட்டை உடைத்துவிட்டு, அங்கிருந்த சாமி படங்களை வணங்கிவிட்டு, பணத்தை எடுக்கும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அந்த கடையில் இருந்து 8 ஆயிரம் ரூபாய் திருடிச் சென்றுள்ளார். ஸ்ரீபெரும்புதூரில் கொள்ளையடித்து 2 மாதங்களாக பிடிபடாமல் இருந்ததால், தற்போது திருவண்ணாமலையிலும் கைவரிசை காட்டியுள்ளதாக வணிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


Next Story