பள்ளி மாணவர்களை விடுதிக்குள் வைத்து பூட்டிய காப்பாளர்... தேனி அருகே பரபரப்பு


பள்ளி மாணவர்களை விடுதிக்குள் வைத்து பூட்டிய காப்பாளர்... தேனி அருகே பரபரப்பு
x

தேனி மாவட்டம் கம்பத்தில் பள்ளி மாணவர்களை விடுதிக்குள் வைத்து விடுதி காப்பாளர் பூட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி,

தேனி மாவட்டம் கம்பம் கோசந்திர ஓடை அருகே உள்ள, அரசு கள்ளர் மாணவர் விடுதியில், 10 மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இங்கு மாணவர்களுக்கு 3 வேளை உணவு வழங்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் விடுதியில் மாணவர்கள் உணவு உட்கொண்டனர்.

அப்போது சில மாணவர்கள், மீதி உணவை கீழே கொட்டியதால் ஆத்திரமடைந்த விடுதி காப்பாளர் சத்தியேந்திரன், குடிக்க தண்ணீர் கூட கொடுக்காமல் விடுதியில் உள்ள அனைத்து அறைகள் மற்றும் வெளிக்கதவை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

இதுகுறித்து சைல்டு லைன் இலவச தொலைபேசி எண்ணில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள், விடுதியில் உள்ள மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, விடுதி கதவுகளை பூட்டியதால், குடிக்க தண்ணீரின்றி, கழிவறையில் உள்ள குழாயில் தண்ணீரை பிடித்து குடித்ததாக மாணவர்கள் கூறியுள்ளனர்.


Next Story