லாரியில் ஏற்றி வந்த வைக்கோல் தீப்பிடித்தது
பள்ளிப்பட்டு தாலுகா அருகே லாரியில் ஏற்றி வந்த வைக்கோல் தீப்பிடித்தது.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை கிராமத்தில் இருந்து ஒரு லாரி வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு அம்மையார்குப்பம் கிராம சாலை வழியாக வந்தது. அப்போது சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது வைக்கோல் லாரி உரசியது. இதில் மின்கம்பம் முறிந்து மின் கம்பிகளில் இருந்து தெறித்த தீப்பொறி பட்டு லாரியில் இருந்த வைக்கோல் கட்டுகள் தீப்பிடித்து எரிந்தன. டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி விட்டார். லாரியில் வைக்கோல் கட்டுகள் தீப்பிடித்து எரிவதை பார்த்த கிராம மக்கள் சாமர்த்தியமாக தண்ணீரை கொண்டு வந்து தீப்பிடித்து எரிந்த வைக்கோல் கட்டுகள் மீது ஊற்றி தீயை அணைத்தனர். மின்கம்பம் முறிந்து விழுந்ததால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது.
Related Tags :
Next Story