விவசாயி வீட்டில் 9 பவுன் நகை திருட்டு


விவசாயி வீட்டில் 9 பவுன் நகை திருட்டு
x

விவசாயி வீட்டில் 9 பவுன் நகை திருட்டு போனது.

திருச்சி

பொன்மலைப்பட்டி:

விவசாயி

திருவெறும்பூர் அருகே உள்ள ஆலத்தூர் பூங்கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம்(வயது 45). விவசாயி. இவரது மனைவி பானுமதி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பானுமதி, ராமலிங்கம் அகியோர் வீட்டை பூட்டிவிட்டு, சாவியை வெளியே மறைத்து வைத்துவிட்டு வெளியூர் சென்றுள்ளனர்.

இதையடுத்து அவர்களது மகன் மற்றும் மகள் அந்த சாவியின் மூலம் கதவை திறந்து வீட்டிற்குள் சென்று வந்துள்ளனர். மேலும் ராமலிங்கமும், பானுமதியும் ஊருக்கு திரும்பினர்.

நகைகள் திருட்டு

இந்த நிலையில் வீட்டின் கதவு நேற்று காலை திறந்து கிடந்தது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த 9 பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து ராமலிங்கம் அளித்த புகாரின்பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேன் கவிழ்ந்தது

*மிலாடி நபியை முன்னிட்டு நேற்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாப்பாக்குறிச்சி பகுதியில் மது விற்ற காட்டூர் பர்மா காலனியை சேர்ந்த செல்வத்தை(48) திருவெறும்பூர் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 14 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

*முசிறியை அடுத்த வெள்ளூர் பஸ் நிறுத்தம் அருகில் திருச்சியில் இருந்து சேலம் நோக்கி ஒரு வேன் சென்றது. முன்னால் சென்ற பஸ்சை முந்த முயன்றபோது வேன் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த லால்குடி பம்பரம்சுத்தி பழைய தெருவை சேர்ந்த பிச்சை மகன் மணிவேல் (33) படுகாயம் அடைந்தார். இது குறித்து வேன் டிரைவர் லால்குடியை சேர்ந்த மனோகர்(30) மீது லால்குடி சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மனைவியை துன்புறுத்தியவர் மீது வழக்கு

*திருவெறும்பூர் அருகே கூத்தைப்பார் சாலையில் உள்ள வ.உ.சி. நகரை சேர்ந்தவர் கண்ணதாசன். ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான இவரது வீட்டின் கழிவறை பகுதியில் பாம்பு ஒன்று வருவதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து, தியேட்டர் ஒன்றில் சினிமா பார்த்து கொண்டிருந்த கண்ணதாசனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் உடனடியாக நவல்பட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், அங்கிருந்த 3 அடி நீற கண்ணாடிவிரியன் பாம்பை லாவகமாக பிடித்து, அடர்ந்த காட்டுப்பகுதியில் கொண்டு விட்டனர்.

*முசிறி வட்டம் தண்டலைபுத்தூர் தெற்கு காலனியை சேர்ந்தவர் சிவக்குமார்(28). இவர் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மணிமேகலை(28). இந்நிலையில் சிவக்குமாருக்கு, துர்காதேவி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, குடும்பம் நடத்தி வருவதாகவும், இதனை தட்டிகேட்ட மணிமேகலையை சிவக்குமார் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் சிவக்குமார், துர்காதேவி, செல்வராஜ், பெரியசாமி, மல்லிகா, சூரப்பன் மற்றும் மூக்கையா ஆகியோர் மீது முசிறி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story