வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x

திருநின்றவூரில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

திருவள்ளூர்

ஆவடி அடுத்த திருநின்றவூர் கோமதிபுரம் முதல் மெயின் ரோட்டை சேர்ந்தவர் விஜயபாஸ்கர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவரது மனைவி லட்சுமி (வயது 42) இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நேற்று காலை விஜயபாஸ்கர் வேலைக்கு சென்று விட்டார். மூத்த மகள் கல்லூரிக்கு சென்று விட்டார். இளைய மகள் திருநின்றவூர் முருகேசன் நகரில் உள்ள விஜயபாஸ்கரின் பெற்றோர் வீட்டில் தங்கி உள்ளார்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலை லட்சுமி வீட்டை பூட்டிவிட்டு மகளை பார்ப்பதற்காக தனது மாமியார் வீட்டிற்கு சென்றார். அதன் பின்னர் மகளை பார்த்து விட்டு கடைக்கு சென்று காய்கறிகளை வாங்கிக் கொண்டு மதியம் வீட்டிற்கு வந்தார்.

அப்பொழுது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதைத் தொடர்ந்து லட்சுமி வீட்டுக்குள் சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து பீரோவை உடைத்து அதிலிருந்து 17 பவுன் நகையை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் திருநின்றவூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

1 More update

Next Story