பெருங்களத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை


பெருங்களத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை
x

பெருங்களத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை

பெருங்களத்தூர் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 38). இவர் தேனாம்பேட்டையில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவர் கடந்த 28-ந் தேதி குடும்பத்துடன் ஊட்டி, பரம்பிக்குளம் டாப்சிலிப்பிற்கு சுற்றுலா சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பின்புறம் கதவை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் வீட்டில் உள்ள பீரோவில் இருந்த சுமார் 50 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.30 ஆயிரத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து பீர்க்கன்காரணை போலீஸ் நிலையத்தில் நாகராஜ் புகார் அளித்ததின் பேரில், போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் உள்ள காட்சிகளை சேகரித்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

தற்போது கொள்ளையன் திருடும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story