கவர்னர் மாளிகை அழைப்பிதழில் காவி உடையில் திருவள்ளுவர் - செல்வப்பெருந்தகை கண்டனம்


கவர்னர் மாளிகை அழைப்பிதழில் காவி உடையில் திருவள்ளுவர் - செல்வப்பெருந்தகை கண்டனம்
x

கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் நாளை திருவள்ளுவர் திருநாள் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு கவர்னர் மாளிகை தரப்பில் அழைப்பிதழ் வெளியிடப்பட்டுள்ளது. கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்து இருப்பதாவது'

"அரசு அங்கீகரித்த புகைப்படத்தை மாற்றி, சாதி, மத, சமயம் சார்ந்து திருவள்ளுவர் புகைப்படத்தை வெளியிடுவது சட்டத்திற்குப் புறம்பானது; சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கும் கவர்னரே இப்படிச் செய்வது கண்டனத்திற்குரியது."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story