வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ. 25 ஆயிரம் லஞ்சம் கேட்ட அதிகாரிக்கு 3 ஆண்டு ஜெயில் - செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு


வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ. 25 ஆயிரம் லஞ்சம் கேட்ட அதிகாரிக்கு 3 ஆண்டு ஜெயில் - செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு
x

வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்ட மின் வாரிய அதிகாரிக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

செங்கல்பட்டு

சென்னை, சிட்லபாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை என்ஜினீயராக சந்திரசேகர்(47) வேலை பார்த்து வந்தார். கடந்த 9-6 - 2009 அன்று அந்த பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் தான் புதியதாக கட்டியுள்ள வீட்டுக்கு 3 பேஸ் மின் இணைப்பு கேட்டார்.

அதற்கு இளநிலை என்ஜினீயர் சந்திரசேகர். ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சந்திரசேகரன் இது குறித்து சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

போலீசாரின் ஆலோசனை படி ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை மின்வாரிய அதிகாரி சந்திரசேகரிடம் வழங்கினார்.

மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலிசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட முதன்மை குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயஸ்ரீ மின்வாரிய அதிகாரி சந்திரசேகரனுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.


Next Story