தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு


தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு
x
தினத்தந்தி 27 March 2024 4:46 AM GMT (Updated: 27 March 2024 5:24 AM GMT)

தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது.

சென்னை,

தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்த நிலையில், இன்று சற்று உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.120 உயர்ந்து ரூ.49,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.6,215-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.80.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Next Story