விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


விழுப்புரம்  மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
x

தமிழகம் மற்றும் புதுவையின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுவையின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று (14.11.2023) ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


Next Story
  • chat